பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர்

ஆசை யோடு பள்ளி வந்தே
அன்பாய்ப் பாடம் சொல்லுவார் !-வகுப்பில்
அன்பாய்ப் பாடம் சொல்லுவார் !
மேசை மீது தட்டித் தட்டி
மெல்லப் பாடம் சொல்லுவார் -நாங்கள்
சொல்லப் பாடம் சொல்லுவார் !

கண்ணைக் கையை ஆட்டி ஆட்டிக்
'கப்சிப்' பென்றே கூவுவார் !-நாக்கைக்
கடித்துக் காட்டிக் கூவுவார் !
எண்ணி எண்ணி எண்ணிக் காட்டி
எம்மை எண்ணச் சொல்லுவார் -குண்டை
எடுத்தே எண்ணச் சொல்லுவார் !

எழுதி எழுதி எழுதிக் காட்டி
எழுதச் சொல்லி அதட்டுவார் -பாடம்
எழுதச் சொல்லி அதட்டுவார் !
அழுத பிள்ளே சிரித்துக் காட்டும் ;
அவரைக் கண்டு அடங்குமே !-அவர்
அன்பைக் கண்டு அடங்குமே !