பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொங்கல் வந்தது


வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல் !
மலர்கள் எங்கும் பூத்ததே !
வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல் !
மாடு கன்று கொழுத்ததே !

வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல் !
வாழைக் குலையும் பழுத்ததே !
வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல்
மாவும் பலாவும் பழுத்ததே !

வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல் !
வந்தன கரும்புக் கழிகளே !
வந்தது பொங்கல் ! வந்தது பொங்கல் !
பாலும் பொங்கி வழிந்ததே !

53