பக்கம்:இன்னமுதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ●

இன்னமுதம்



தோடுடையசெவி யன்விடையேறியோர்
துவெண்மதிசூடி
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்
உள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்து
ஏத்தஅருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய
பெம்மானிவனன்றே.

"தோடு அணிந்த காதுகளை உடையவன்; விடை என்று சொல்லப்படும் காளை மாட்டின் மேல் ஏறி, துய்மையான வெள்ளிய பிறைச் சந்திரனைத் தலையிலே சூடி, சுடுகாட்டில் உள்ள சாம்பலைப் பூசி, என்னுடைய மனத்தைக் கவர்கின்றவன் (யார் என்றால்) இதழ்களையுடைய தாமரைப் பூவில் தோன்றிய நான்முகனாகிய பிரமன் தன்னைப் பணிந்து ஏத்தலினாலே அவனுக்கு அருள் செய்த பெருமை பொருந்திய திருப்பிரமபுரம் என்று சொல்லப்பெறும் சீர்காழியில் தங்கியுள்ள பெருமானாகிய இவனேயாகும்"

(விடை ஏறி-ரிஷப வாகனத்தில் அமர்ந்து; காடுடைய சுடலைப் பொடி- சுடுகாட்டில் உள்ள திருநீறு; ஏடு உடைய மலரான்- இதழ்கள் பொருந்திய தாமரையில் தோன்றிய நான்முகன்; முனைநாள்- முன்பொரு நாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/14&oldid=1352518" இலிருந்து மீள்விக்கப்பட்டது