பக்கம்:இன்னமுதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 о இன்னமுதம் அடிகளின் பொருள் இறைவனின் திருவடியை ஏத்துபவர்கள் தொண்டு செய்கின்றவர்கள். ஆதலால் துன்பத்தை அடையமாட்டார்கள்.) நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை உறும்பொரு ளாற்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு அறும்பழி பாவம் அவலம் இலரே. "நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தனாகிய நான், பெறுதற்கரிய உதவியை வழங்குகின்ற நல்லூர்ப் பெருமணத்தில் உள்ளவனை, அவன் திருவடியை அடைகின்ற கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடவல்லாருக்குப் பழிபாவம் அறும், மேலும், அவலமாகிய பிறவித் துன்பமும் அற்றுப் போகும். - (நறும்பொழில்- நல்ல மணம் கமழும் சோலை; உறும் பொருளால்- திருவடியின் சேரும் எண்ணத்தோடு; ஒண்தமிழ்சிறந்த பயனைத் தரக்கூடிய தமிழ்; வல்லார்- மனம் கசிந்து பாட வல்லவர்கள்; அவலம்- பிறவித் துன்பம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/32&oldid=747034" இலிருந்து மீள்விக்கப்பட்டது