பக்கம்:இன்னமுதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைக்குறிப்புகள்: அ. ச. ஞானசம்பந்தன் е 67 இப்பாடல் சிவபெருமானுடைய திருமேனியைப் பல உவமைகள் மூலம் எடுத்து விளக்குகிறது. விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி.அஞ் ஞாயிறு சூழ்ந்து எரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை. அச்சடைக்கீழ்ச் சரிகின்ற கார்இருள் போன்றது கண்டம். அக்கார் இருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள்ள தால்எந்தை ஒண்பொடியே. “காலையில் புறப்பட்டு மேலேறும் சூரியனைப் போன்று சிவந்த நிறமுடையது இறைவனுடைய மேனி, அந்தச் சூரியனைச் சூழ்ந்து எரிகின்ற சிவந்த கிரணங்களைப் போன்றுள்ளது அவனுடைய சிவந்த சடைக்கற்றை; அச்சடையின் கீழ் உள்ள நீல நிறம் பொருந்திய கண்டம் (நீலகண்டம்) செறிந்த இருள் போன்றது; அந்தக் கரிய இருளின் மேல் படர்ந்துள்ள வெண்மையான மேகக் கூட்டங்கள் போன்றுள்ளது இறைவன் மேனியில் பூசப்பெற்றுள்ள திருநீறு.” (விரிகின்ற ஞாயிறு- காலையில் தோன்றும் சூரியன்; எரிகின்ற வெங்கதிர் தீக் கொழுந்துடன் கூடிய கிரணம்; கண்டன்-இறைவனுடைய கழுத்து ஆலகால விடம் தங்கியுள்ளமையால் நீலகண்டம் எனப் பெயர்பெறும்; வெண்முகில்- வெண்மேகம், ஒண்பொடி- ஒளி பொருந்திய திருநீறு (விபூதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/69&oldid=747074" இலிருந்து மீள்விக்கப்பட்டது