பக்கம்:இன்னொரு உரிமை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காமதேனு

லையில் ஒரு 'அம்பாரம்' புல்கட்டோடும், அதன் மேல் கவிழ்த்து வைக்கப்பட்ட மண் வெட்டி 'காம்பை' ஒரு கையில் பிடித்தபடியும் இன்னொரு 'கக்கத்திற்குள்' அகத்திக்கீரைக் கட்டை விலாவோடு சேர்த்தபடியும், முத்து லிங்கம் அந்த ஓலை வீட்டிற்குள் ஆவேசமாக வந்தான், மண்வெட்டியை அவன் தூக்கிப்போட்ட வேகத்தில் அது முற்றத்தில் பள்ளம் பறித்தது. வெள்ளை வெளேரென்று பனை நாரால் இருபுறமும் இறுக்கிக் கட்டப்பட்டதால், நடுவில் துருத்திக்கொண்டிருந்த பச்சை பசேலென்ற புல்கட்டு. மேளம் போலவே தோன்றியது. இதனால் தானோ என்னவோ கம்மாகரையில் உலா போட்ட புது பணக்காரப் பயல்கள் "என்னடா முத்துலிங்கம் தலையிலே மேளத்தைச் சுமந்துகிட்டு போறே, அதை வயித்துலல்லா தொங்கப் போடணும்" என்று கிண்டலும் கேலியுமாய் கேட்டிருக் கிறார்கள்.

புல்கட்டைட இறக்க முத்துலிங்கம் கைகளை அதன்மேல் 'போட்டபோது அந்தப் பயல்களின் கிண்டல் அவன் காதில் பலமடங்காய் இப்போது ஒலித்தது. நளினமாய் இறக்கப்போன புல்லை, இரண்டு கரங்களாலும் தூக்கிப் பிடித்து, பொத்தென்று போட்டான். போதாக்குறைக்கு மேளம் அடிப்பதற்கு முன்பாக அந்த மேளத்தைத் தடவிப் பார்ப்பார்களே-அந்த மாதிரியான தடவல் ஓசையோடு புல்கட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/102&oldid=1369313" இலிருந்து மீள்விக்கப்பட்டது