பக்கம்:இன்னொரு உரிமை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232  சு. சமுத்திரம்


டாள். 'உனக்கு என்னைவிட என் டிரெஸ் தான் பிடிச்சிருக்கோ' என்று அவள் சிணுங்கியபோது, அவன் சிரித்த, விதத்தை இப்போது நினைத்துக் கொண்டாள்.

அதே புடவையைக் கட்டிக்கொண்டு அதே மாதிரி 'ரிங்' விட்டு, முன் நெற்றியில் முடிக்கற்றைகளை நளினப்படுத்தி வைத்துக்கொண்டு அம்மாவுடன், தம்பிகள் சகிதமாய்ப் புறப்பட்டாள்.

"வாம்மா வித்யா" என்று வரவேற்றாள் அத்தைக்காரி, வித்யா ரவியை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனும் சிரித்தான்.

அத்தைக்காரி ஒரு போட்டோவைக் காமாட்சியிடம் காட்டினாள். யாரோ ஒரு வாலிபனின் போட்டோ.

அத்தைக்காரி அடுக்கினாள்.

"இவன் நம்ம ரவிக்கு பிரண்டாம். டில்லியில வேலை பார்க்கிறானாம். நல்ல குடும்பப் பெண்ணா வேணுமுன்னு' ரவிகிட்ட கேட்டானாம்! மெட்ராஸ்ல அவனுக்கு வசதியா பெண் பார்க்க ஆளில்லையாம். அப்பா, அம்மா கிடையாதாம். அதுவும் நமக்கு நல்லதாப்போச்சு!"

வித்யாவுக்குத் தலை சுழன்றது.

"எனக்கு யாரும் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம்."

வித்யா இதுவரை போடாத பலத்த சத்தத்தில் கத்தி விட்டு மேற்கொண்டு சிறுமைப்பட விரும்பாதவள்போல் எங்கேயோ ஓடினாள். அது மாடியில் ஒரு அறையில் அவளை நிறுத்தியது. நிலைகுலைந்த மேனியை நிலைப்படுத்துவதற்காக ஒரு தூணில் தலையை வைத்துக்கொண்டு கைகளால் அதற்கு அணை கொடுத்தவாறு விழிகள் சொட்ட நெஞ்சம் விம்ம, நினைவுக் கானலின் ஏமாற்றம் தாங்கமாட்டாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/241&oldid=1368863" இலிருந்து மீள்விக்கப்பட்டது