பக்கம்:இன்னொரு உரிமை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 சு. சமுத்திரம்

"சரி, சரி, மடமடன்னு பேசு! நம்பர் சொல்லு, நானே டயல் செய்யுறேன். ஏன்னா சிலர் ரெண்டு ரூபாய்க்கு டில்லிக்கு எஸ்.டி.டி. போட்டு பேசிடுவாங்க. நீ அப்படி இல்லன்னு தெரியும். இருந்தாலும் கண்டிஷன்னு ஒண்ணு வச்சிருக்கோம் பாருங்க!”

வேதா உதடுகளைக் கடித்தபடி சேவகர் சொல்வதைக் கேட்டுவிட்டு, ஒவ்வொரு நம்பராகச் சொல்ல, அதற்கேற்ப அவர் டயலைச் சுழற்ற, அந்தக் கடையின் ‘நம்பர் ஒன்’ வழுக்கைத் தலை கல்லாவில் இருந்து குதித்து. அவர்களுக்கு இடையே வந்து கர்ஜித்தது:

“டெலிபோனுக்குக் காசு வாங்கினியா...”

“வந்து ஸார்... இந்தப் பெண்ணோட...”

“நீங்க ரெண்டுபேரும் கிசுகிசு பேசினதை நான் கவனிச்சுட்டுத்தான் வாறேன். அறிவுகெட்ட கம்மனாட்டி, இந்தக் காலத்து நாகரீகத் திருடு பற்றி ஒனக்குத் தெரியாதா! டெலிபோன் செய்யுற சாக்குல ஒரு பட்டையோ, பாலிஸ்டரையோ பைக்குள்ளே வச்சுட்டால் ஒப்பனா காசு தருவான். ஒம்மாவா திருப்பித் தருவாள்! எந்த அழகான பெண்ணும் ஒன் கண்ணுல பட்டுடப்படாதே! கடையையே தூக்கிக் கொடுத்திடுவியே! அடுத்த வாரம் ஒன் கணக்கைத் தீர்க்கேனா இல்லியான்னு பாரு! இந்தாம்மா, ஒன்னைத்தான். மொதல்ல இடத்தைக் காலி பண்ணு. காலங்காத்தாலே, பத்துமணிக்குக் கடையைத் திறந்தவுடனேயே கலாட்டாவா, உருப்பட்டாப்லதான். இந்தாடா இந்தப் பொண்ணோட பையை செக் பண்ணி அனுப்பு. ஒன்னை இல்லடா. நீ ஒரு துணியை அவள் பைக்குள்ளே வைச்சுக்கூட அவளை வழியனுப்புவே!”

பாண்டவர் காலத்தில் துச்சாதனனாகப் பிறந்திருக்கக் கூடிய கடைச் சேவகன் ஒருத்தன் வேதாவின் ஜோல்னா பையைத் துழாவினான். துணிகளை எடுத்து வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/53&oldid=1388395" இலிருந்து மீள்விக்கப்பட்டது