பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15

யடைய வேண்டில் என்னால் தீவினை நீங்கிக்கிடக்க என்றான். இச்சொற்கள் கோலனுக்கும் மகிழ்ச்சியைத் தந்தன. அரசன், ஆரியனைத் தாங்கினான். அவனைத் தேவகுலமாக்கினான். அவனால் பெருமக்களை அடக்கினான். அவர்களின் எழுச்சியைத் தரைமட்டமாக்கினான். “இதுவன்றி முற்பிறப்போ, ஒருவனுக்கு மறுபிறப்போ உண்டு எனலும் செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம், உண்டு எனலும் உண்மையல்ல. இனி, மட்டான இன்பம் தவிர, பேரின்பம் எது என்றால் கூறு கிறேன்.

உன்னாட்டுக்கு மற்றொரு நாட்டால் துன்புமில்லை; நீ விடுதலையுடையவன்; நீ நோயற்றவன் தீயும் வெள்ளமும் உன்னை நெருங்காத நிலையில் நீ உள்ளவன். நீ இன்பம் நுகர்கின்றாய்! அந்த நிலையில் உன்னை உயர்ந்த ஒவியம் நெருங்குகிறது. உன் கண்கள் பேரின்பம் நுகர்கின்றன! அதே நிலையில் உன் செவி நோக்கி இசையேறிய பாட்டொன்று வருகின்றது. உன் காது பேரின்பம் அடைகின்றது. அரும்பிலும் மணக்கும் முல்லை வருகிறது. உன் மூக்கும் பேரின்பம் அடைகின்றது. அன்னத்தின் தூவி திணிந்த மெல்லணையில் படுக்கின்றாய், உன் மெய் பேரின்பம் எய்துகின்றது! கோடைபுறம் போக்கும் ஓடுபிடிக்காத இளநீரைக் குடிக்கின்றாய். உன் வாய் பேரின்பம் நுகர்கின்றது. உன் கண்ணையும் மனத்தையும் கவர்ந்தாள். அவளோ எண்ணையும்