பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30

30 இதைப்போலவே, சிற்றின்பம், பேரின்பம், என இரண்டு இன்பங்கள் உண்டு என்று கூறுவதும் உண்மையல்ல; சிறிது பெரிது என்று, இன்ப த்திற்கு உண்மையில் அளவும் கிடையாது. தோற்றத்தின் அளவே, அவைகளின் அளவெனக் கொள்ளல் வேண்டும். உடல் வலுவுடையோன் ஒருவன், ஒரு பெண்ணிடம் பெறும் இன்பத்தைப் பேரின்பமாகக் கருதுவதும், சற்றுக் குறைந்த வலுவுடையோன், அதையே துன்பமாகக் காண்பதும், இன்பத்திற்குத் தனியான அளவில்லையென்பதைக் காட்டக்கூடிய தாயிருக்கும். - - தன்னை மறந்தின்பமுறத் தவம் செய்ய வேண்டு மென்று சிலர் சொல்லுவது, வேடிக்கையிலும் வேடிக்கையாயிருக்கிறது. தன்னை மறவாது, நாம் எப்படி இன்பதுன்பங்களை நுகரமுடியும்? நறுக் கென, நம் காலில் ஒரு முள் குத்தும்பொழுது, அந்த முள் குத்திய நினைப்பல்லாது. நம்மைப் பற்றிய நினைவோ அல்லது புலன்களால் நுகர்ந்து கொண் டிருக்கும் இன்ப துன்பங்களின் நினைவோ இருக்குமா என்று எண்ணிப் பாருங்கள். இதுபோலவேதான், இன்பத்தையும் ஒரு புலன் வழியாக நாம் நுகர்ந்துகொண்டிருக்கும்பொழுது மற்றப் புலன்கள் தானாக அடங்க நாம் நம்மையும்