பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36

36 வழியில்லையா? என்ற இரைச்சல் குமுறிக் கொண் டிருந்தது என் உள்ளத்தில். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் தான் நின்றேன் வீசுந்தென்றல்-ஆடுந் தென்னங் குருத்துகள்-பொன்னிறப் பகலவன்-நீலவானம்குயிலின் குரல், பட்சிகளின் ஒலம் இவைகளைப் பார்க்க-கேட்க இன்ப மயமாகத்தானிருந்தது எனக்கு எதிரே இன்று தோன்றும் குடிசைகள் அன்றுந்தான் இருந்தன. அன்று இந்தக் குடிசை களின் கோரம் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனால் இன்று எல்லையில்லாத தூரத்திற்குத், துன்பச் சாயலையே இந்தச் சாளரம் எனக்குக் காட்டுகிறது. இருண்ட வாழ்வு என் முன் திரண்டு நிற்கின்றது இன்பம் என்னை விட்டோடியது. துன்பம் என்னைச் சூழ்ந்துகொண்டது. வறண்ட வாழ்க்கையின் பள்ளத்தாக்கிலே நான் தள்ளப்பட்டேன். இனி இன்பம் என்னை அண்டுமா? இன்பத்தை நாடுகிறது மனம். இன்பம் எது? பொய்-பொறாமை-சூது வஞ்சகம் நர்த்தன மாடுகின்றன எங்கும். வறுமை அந்த நர்த்தனத் திற்குப் பக்கமேளம் கொட்டுகிறது. கொலை களவு முதலியன நர்த்தனத்தைக் கண்டு கைதட்டி ரசிப்பது போலிருக்கிறது, அமைதியில்லை. ஆகையால் துன்பம் ஆளத் தொடங்கிவிட்டது.