உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உயிர் வகைகள் இன்பத்தைக் கருதித்தான் வாழ்கின்றன.

இன்பமில்லையேல் வாழ்க்கை இல்லை. பல துன்பங்களுக்கு இடையில் தோன்றும் ஒரு அல்ல சிறு இன்பத்திற்காகவே மக்கள் பல துன்பங்களைப் பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள். இன்பங்கண்டபோது அதற்காக அதுவரையில் தாங்கள் பட்ட துன்பத்தையெல்லாம் மறந்து மனம்களிக்கின்றார்கள். ஒரு வக்கீலைக் கவனியுங்கள்! அவர் யோக்கியரா என்று பாருங்கள் ஆம்! யோக்கியர் தாம். பணத்தைப் பெற்றுக்கொள்ளுகிறாரா வழக்கிற்காக! தம் கட்சிக்காரன் நன்மை பெறுவதற்காக தம் முழுத்திறத்தையும் உபயோகித்து நீதிமன்றத்தில் பேசுகிறார் உற்சாகமாக! வழக்கு வெற்றி பெற்றால் அவர் உண்மையில் இன்பமடைகிறார் இன்றேல், தனக்குப் பணம் கிடைத்து விட்டதே என்ற ஒரேகாரணத்திற்காக அவர் இன்பம் அடைவதில்லை. அடையவும் முடியாது. அதுபோன்றே டாக்டர் ஒருவர் தமக்கு வரவேண்டிய பொருள் வந்துவிட்ட காரணத்திலேயே இன்பம் அடைந்து விடுவதில்லை. நோயாளி குணமடைந்தான் என்றால்தான் அவர் மனதில் இன்பம்தோன்றுகிறது.

குழந்தைகளின் உள்ளமும் வளர்ந்தவர்களின் உள்ளமும் ஒன்றாகவே இருக்கின்றது! ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைகளில் இன்பமடைகிறார்கள்! காதலர்கள் சந்திப்பில்