உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

இறக்கவில்லை. நடமாடும் உலகிலேதான் உயிருடனிருக்கிறோம், ஆதலால் நமக்கு அத்தகைய அடுத்த உலகத்திய அழியா இன்பத்தைப்பற்றி அறிந்திருக்கக் காரணமுமில்லை வசதியும் கிடையாது. உள்ளத்திலே ஏற்படும் உணர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாயிருந்தால் அதை இன்பம் என்கிறோம். வருத்தம் உண்டாக்குவதாயிருந்தால் துன்பம் எனக் கூறுகிறோம். ஆகவே இந்த முறையிலே பார்த்தால் பசிப்பது துன்பம், புசிப்பது இன்பம். மல்லிகாவின் வரவுக்காக மலர்ச்சோலையில் காத்திருக்கும் காதலனுக்குக் கூட பசி தான்! காதற்பசி!!

ஆனால் பசித் துன்பத்தைப், போக்கிப் புசித்து இன்பமடைவதிலே எத்தகைய விபரீதங்கள் நேரிடுகின்றன. ஓநாய் தனது பசியை ஆட்டுக்குட்டியின் உயிரைக் கொண்டுதானே போக்கிக்கொள்கிறது. நரிபுசித்து இன்பமடையவேண்டுமானால் நண்டு அதற்கு இரையாக வேண்டும். பூனை இன்பமடைய எலியை விழுங்கவேண்டும். மீனுக்கு அதனின் குஞ்சு, இது மிருகராசியில் மட்டுமல்ல!

நீலாவின் கணவனுக்கு, வனிதாவின் தகப்பன் வடிவேலு முதலியாருடைய தென்னந்தோப்பிலே தேங்காய் பறிக்கும் தொழில். பறிக்கப்பட்ட தேங்காய்கள் பம்பாய் மார்க்கட்டிலே பணமாக்கப்பட்டுப் பண்ணை முதலியாரின் பைக்குள் வந்துவிடும். நீலாவின் கணவனுக்குக்கூலி எனும் பெயரால் மாதமொன்றுக்கும் பத்து ரூபாய்கள் கிடைக்கின்-