பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56

56 றன. மாரிகாலம். கனத்தமழை, மரங்களெல்லாம் வழுக்கல் படிந்துவிட்டன. தேங்காய் பறிக்க ஏறின் நீலாவின் கணவன் ஒரு தென்னையிலிருந்து சருக்கிவிழுந்துவிட்டான், மார்பிலே பலத்த அடி. பறிக்கப்பட்ட தேங்காய்கள் வழக்கப்படி மார்க் கெட்டுக்குச் சென்று பணமாகத் திரும்பிவிட்டன. பண்ணையாரின் பெட்டிக்கு. பறித்துக் கொடுத்த பாட்டாளி இன்னும் படுக்கையிலே கிடக்கிறான். மார்பிலே பட்ட அடியால் நெஞ்செலும்பு நொருங்கி விட்டது எனக்கூறிய கிராமவைத்தியர் பணம் இல்லாமல் பார்ப்பதற்கு நான் தர்மவைத்திய சாலை வைத்து நடத்தவில்லை என வேறு கூறி விட்டார். நிர்க்கதியான நீலா பண்ணையாரை அணுகிச் சற்று உரிமையோடுதான் கேட்டாள். 'மரங்களெல்லாம் வழுக்கல். அதனால்தான் என் கணவன் விழுந்துவிட்டான். விலாஎலும்பு நொருங்கி விட்டது என வைத்தியர் கூறுகிறார். பணமின்றிப் பார்க்க முடியாது எனவும் கூறிவிட்டார். வைத் தியச் செலவுக்காவது ஏதாவது கொடுங்கள்’’ என்று. 'ஏதோ விஷக்கடிவேளை, அதற்கு நான் என்ன செய்யட்டும். ஏறின மரத்துக்கெல்லாம் காசுகொடுத்தாய் விட்டது, என்னால் இனி ஒன்றும் முடியாது’ என்றுகூறிவிட்டார் முதலியார். பாவம்! நீலா கண்களில் நீர் சொரிய பண்ணையாரைப் பார்த்துப் பரிதாபம் கலந்த குரலிலே தனது மாங்கல்யத்தைத் தொட்டுக் காண்பித்துக் கதறி னாள். கதறவா செய்தாள், தனது நைந்துபோன இருதயத்தின் ஆழமான புண்ணை அவரிடம் காண்