பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனில்லா வாழ்க்கை 25

நட்டு வளர்க்கும் நறுமுல்லை மொட்டரும்பித் - தொட்டேறும் துணைக்கொம்பைக் கானது காற்றிற் பட்டலேதல் போல் நானும் பாடழிந்தேன் தோழி!

கார்தந்த செந்நெல்லேச் சீராக்கி இட்ட நீர்ப்பான தீயேற நிலைகுலையும் அரிசிபோல் போர்த்தோளேக் கானது பொலிவிழந்தேன் தோழி!

நீரற்றுக் காய்ந்த ஆற்றின் நிலைபோலச் சீரற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை !

மாரி வளம்பெருக்க வற்றியபின் காய்ந்த ஏரிபோல் ஆகும் அவனில்லா வாழ்க்கை !

நெல்விளையா நன்செய் நிலப்பரப்பைப் போலச் செல்லாத காசாகும் அவனில்லா வாழ்க்கை!

மழைகாணுப் புன்செய்யில் வளரும் பயிர்போல அழகற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!

உளம்ஒவ்வாக் காதலரின் உருப்படாக் குடித்தனம்போல் வளமற்ற தாகும் அவனில்லா வாழ்க்கை!

 பிள்ளே ஒன்றேனும் இல்லாப் பெருங்குடிபோல் சள்ளே நிறைந்ததாம் அவனில்லா வாழ்க்கை: - ஒலியற்றுப் போன ஊரின் கடைத்தெருபோல் பொலிவற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!
கணக்காயன் இல்லா வகுப்பேபோல் என்றும் பிணக்கு நிறைந்ததாம் அவனில்லா வாழ்க்கை அறிவில்லாப் பேச்சின் செறிவுபோல் என்றும் குறியற்றுப்போகும் அவனில்லா வாழ்க்கை!

2