உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

151

விக்ர : நாசப்பொடியின் இரகசியத்தைச் சொல்லாத வரையில் நீர் தேசத் துரோகிதான்! மல்ல நாட்டு ஓற்றர் தான்! இந்தக் குற்றத்துக்கான தண்டனை என்ன தெரியுமா?

அறி: அறிவேன் விக்ரமா, அறிவேன்! மரண தண்டனையைவிடக் கொடுமையான ஒன்றை உன்னால் கொடுக்க முடியாது என்பதையும் அறிவேன்! ஆணவம் மிகுந்த உன் அகந்தை ஆட்சியில் அணு அணுவாகச் சாவதைவிட, விக்ரமா, மரண தண்டனையே மேல்! நிறைவேற்றிக் கொள், உன் ஆசையை!

விக்ர: (கைகளைத் தட்டி) யாரங்கே?

[வீரர்கள் இருவர் வருகின்றனர்.]

இந்த தேசத் துரோகியை இழுத்துச் சென்று பாதாளச் சிறையில் பூட்டுங்கள். பட்டினிபோட்டு, இவன் கொட்டத்தைக் குறையுங்கள்! உம், இழுத்துச் செல்லுங்கள்!

[என்றதும் கெம்பீரமாக நின்று விக்ரமனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, வீரர்களுக்கு முன்னே நடக்கிறார்; வீரர்கள் அவரைத் தொடர்கின்றனர்.]

காட்சி—51

[குணாளன், ஆய்வுக் கூடத்தில் அமர்ந்து குறிப்புக்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறான். அருகே சோதனைகளில் ஈடுபட்டிருக்கிறான் மணிவண்ணன். மணிவண்ணனுக்கு உதவியாக அவன் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டும். விளக்கமளித்துக் கொண்டும் இருக்கிறாள் திருமதி. மணிவண்ணன் பல்வேறுபட்ட சோதனைகளை ஒன்றன்பின் ஒன்றாகவும், ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றில் ஒன்றைக் கலந்தும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு குப்பியில்