உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

இன்ப

சில திரவங்களையும், சில திடப் பொருள்களையும் கலந்து, இன்னொரு குப்பியில் போட்டு வேறு சில திரவங்களைக் கலக்குகிறான். குப்பென்று பற்றி எரியத் தொடங்குகிறது. திருமதி பயந்து நடுங்குகிறாள்; குணாளன் எச்சரிக்கை செய்து, ஒரு திரவத்தின் பெயரைப் படித்துக் காட்டி, ஒரு அளவையும் கூறி, அதில் கலக்கும் படிக் கூறுகிறான். அவ்வாறே செய்கிறான் மணிவண்ணன். தீயடங்கி, குப்பியிலிருந்து புகையத் தொடங்கி, சில வினாடிகளில் அதுவும் மறைகிறது. குப்பியின் அடியில் ஒருவகை வெள்ளிய தூள் தேங்கி நிற்கிறது. திரவங்கள் ஏதுமில்லை. அதைக் கண்டதும் சந்தோஷ ஆரவாரத்தால் குதூகலித்து...

திரு: பசிப் பிணியைப் போக்கும் மருந்து என்று அப்பா கூறி வந்தது...

குணா: இதைத்தான் திருமதி, இதைத்தான்! இதைக் கண்டுபிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியில்தான் இரணப்பொடி கண்டுபிடிக்கப்பட்டது; தீப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டது!

திரு: அப்பாவிடம் தெரிவிக்க வேண்டுமே அண்ணா! காலையில் அரண்மனைக்குப் போனவரை, இதுவரையில் காணோமே!

குணா: எல்லோருமே போய் இந்த வெற்றி பற்றி அங்கேயே கூறுவோம். திருமதி! மணிவண்ணா, புறப்படுங்கள்!

[மூவரும் புறப்படுகின்றனர். அப்போது ஒருவன் அலறப் புடைத்துக் கொண்டு அங்கு வந்து நின்று]

வந்தவன்: (பதட்டத்துடன்) மோசம்! கொலை! படுகொலை!

[அலறி அழத் தொடங்குகிறான்.]