20
இன்ப
பின்னவர்: குணாளனும் அப்படித்தானாம். குணாளனுக்கு சீக்கிரம் பட்டாளத்திலே பதவி உயரலாமுன்னு பேச்சு அடிபடுது அரண்மனைப்பக்கம்.
முன்னவர்: இப்ப, திருமுடியாருக்கு இது பெரிய பேரிடின்னு சொல்லு.
பின்னவர்: பேரிடியா! பேரிழவுன்னு சொல்லணும். குமாரவேலர் மகாராஜாவா இருந்தாலும், பச்சைக் குழந்தை தான். அதனாலே நாட்டு நிர்வாகத்தையும் விக்ரமரே கவனிச்சுக்கிறார். கோயில் நிர்வாகத்தைக் கவனிச்சுக்கிட்டிருக்கிற திருமுடியாருக்கு, வீண் பொறாமை! தனக்கு செல்வாக்கு வளராமே, விக்ரமருக்குப் புகழ்னா, பொச்சரிப்பு இருக்கத்தானே செய்யும்?
முன்னவர்: மலைகிட்டே போயி மோதுறாரு.
பின்: ஏற்கனவே மண்டை வழுக்கை. இப்போ புத்தியும் வழுக்கையாயிட்டுப் போலே இருக்கு!
முன்: திருமுடியார், அரண்மனைக்குக்கூட குருவாமே?
பின்: ஆமாம், பத்து வயது பாலகனுக்கு அரசியல் குரு, மதகுரு, ராஜகுரு!
முன்: படைத்தலைவரா, மடத்தலைவரான்னு இருக்கு இப்போ!
பின்: கத்திக்கும், புத்திக்கும் போர் ஆரம்பமாகி இருக்கு. காத்திருப்போம்! கவனிப்போம்!
காட்சி—4
குருக்: கேட்டேளோ, நம்ம ஜனங்களோட புத்தி கெட்டுப்போனதை! மலைநாடு ஜெயிச்சது அம்பாளோடெ கிருபை காரணமில்லியாம். விக்ரமனோட வீரமாம். பேசிக்கிறா இப்படி.