உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

21

திருமுடி: தெரியுமே எனக்கு! விக்ரமன் விபரீதங்களை விளைக்கத் தொடங்கி இருக்கிறான். அன்னை பராசக்தியின் அருளை அவன் துச்சமாக மதிக்கிறான். மன்னனிடம் கூறி இருக்கிறேன்! மண்டைக் கனத்தைக் குறைத்தே தீருவேன்!

குருக்: கோயிலுக்கு வரவா, குமாரவேலனைவிட, விக்ரமனைப் பத்திதான் பேசிண்டுபோறா, வாறா. யாரோ குணாளனாமே, அவன் பேரும் இப்ப அடிபடத் தொடங்கி இருக்குன்னேன்.

திருமுடி: பைத்தியக்காரர் அறிவானந்தரின் மகன் குணாளன்தானே! கட்டான வாலிபன்! கண்ணுக்கழகான உருவம்! காளைப்பருவம்!

குருக்: கமலி, உங்களுக்காகக் காத்திண்டிருக்காள். கண்டுட்டுதான் போஜனம் பண்ணுவாளாம்!

திருமுடி: (சிரித்துக் கொண்டே) கழுத்துக்கு மாலை கேட்கிறாள் அவள்! கட்டழகுதான்! கன்னிப்பெண்! காணாமவிருக்க முடியுமோ! வருவதாகச் சொல்லுங்கள்! (குருக்கள் போகிறார். அவர் போனதும், திருமுடியார் எழுந்து அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்துவிட்டு..) வீரமிருக்கிறது விக்ரமனிடம்! விவேகம் இல்லை. அரசன் ஒரு பொம்மை! கோபுரத்துக் கலசமாக இருக்கவேண்டும் அவன். கோயில் தேவனாகவே ஆகிவிட்டான்! என் புகழ் மங்குகிறது. மண்டலங்களையே உருட்டிவிடக் கூடிய மதியூகங்களைப் படைத்த என்னைத் துச்சமென மதிக்கத் தொடங்கிவிட்டான்! வென்று விட்டானாம், போரில்! வீணன்! பேசித் திரிகிறான் வீண் பேச்சுக்களை!

காட்சி—5

[திருநாட்டு அரண்மனை. அமைச்சர் அருணகிரி ஓலைச் சுவடியொன்றை வைத்துப் புரட்டிக் கொண்டிருக்கிறார். நாட்டுப் பாதுகாவலன் விக்ரமன் அங்கு வருகிறான்.]