42
இன்ப
அறி: மிருகங்களைக் கேவலமாகப் பேசாதே, குணாளா! அவைகளுக்கு என்ன மகனே குறை! பிச்சை எடுப்பதில்லையே! நத்திப் பிழைப்பதுமில்லை! உணவு, உடை, குடி இருக்கும் இடம், மனிதனுக்குத்தான் இல்லை; மயிலுக்குத் தோகை இருக்கிறது, அழகான தோகை.. மனிதனுக்கு ஆடை இல்லை, போதுமான அளவு...
குணா: நாடு வளம் பெற்றால், செல்வம் வளரும்...
அறி: மனிதன், குறைந்த அளவு உழைத்து, நிறைந்த அளவு பலன் காண்பான்... இப்போது அவனுக்கு, ஓயாத உழைப்பல்லவா... சுருண்டு கீழே விழுகிறவரையில் உழைக்கிறான்... முயற்சி திருவினையாக்கும் குணாளா! எல்லோரும் இன்பவாழ்வு பெற வழி காண முடியும்...
குணா: பல நாடுகள் உள்ளன அப்பா! பழமுதிர்ச்சோலைகள், பாங்கான வயல்கள், சொகுசான சோலைகள், தங்கச் சுரங்கங்கள்...
அறி: இயற்கை அன்னை, இங்கும் எல்லாச் செல்வத்தையும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறாள், மகனே... தாய், தன் குழந்தையிடம் வேடிக்கை காட்டிக் கொஞ்சுவதில்லை, பழம் தராமல் எல்லாவற்றையும் ஒளித்துவைத்துக் கொண்டு அதுபோல், வேடிக்கை காட்டுகிறாள்... செல்வக்களஞ்சியம் காணலாம்... நமது வெற்றி அதிலேதான் இருக்கிறது... உன்னதமான ஓவியம் தீட்டுவதற்கு, வண்ணங்கள் வகை வகையாக வேண்டாமா... வண்ணம் தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்...
காட்சி—15