ஒளி
77
அறி: கடினமில்லை! ஆனால் அதைவிட மேலான மற்றொரு மருந்துப் பொடியை நான் கண்டுபிடித்திருக்கிறேன்!
விக்ர: அதைவிடப் பலம் வாய்ந்ததுவோ!
அறி: (தூளைக்காட்டி) இதோ, இருக்கிறதே! விரலால் எடுத்து தொடலாம். ஒன்றும் செய்யாது.
விக்ர: எரிச்சல் பொடியைவிடப் பலமானது என்கிறீர்கள்! தொட்டால் ஒன்றும் செய்யாது என்கிறீர்கள்!
அறி: எரிச்சல் பொடியால் உண்டாகிற புண்ணை இது மாற்றிவிடும். அதுவுமல்லாமல் எந்தக் காயத்தையும் சுலபமாக ஆற்றிவிடலாம். இந்த மருந்தை ஏராளமாகத் தயாரிக்க வேண்டும்! தயாரிப்பதுகூடச் சுலபந்தான்.
குணா: இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட, பொறுமை அதிகம் தேவை! உன்னால் முடியுமா மணிவண்ணா! முதலில் வேடிக்கையாக இருந்தாலும் பின் வேதனைப்படுமளவு வேலை வளர்ந்துவிடும். பித்துப் பிடித்தவன்போல உட்கார்ந்திருக்க வேண்டும்!
மணி: குணாளா! சிறிது காலம் கழித்துப் பார்! மணிவண்ணனைப் போன்ற சிறந்த ஆராய்ச்சியாளன் இல்லையென்று சொல்வாய்! நீ போய் உன் வேலையைப் பார்! நான் இதைக் கலனித்துக் கொள்கிறேன்!