உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

இன்ப

குணா: கவனமாயிரு! இந்த அளவு பொங்க ஆரம்பித்ததும், தீயை அணைத்துவிடு!

மணி: எல்லாம் சரியாகச் செய்வேன்!

[குணாளன் போகிறான், தன் வேலையைக் கவனிக்க. மணிவண்ணன் கவனித்துக் கொண்டிருக்கிறான்.]

[பக்கத்திலிருக்கும் தண்ணீர்க் கடிகாரத்தில் தண்ணீர் கொட்டுவது, திருமதி சிரிப்பது போலிருக்கிறது.

மற்றொரு இடத்தில், புகைநெளிந்து எழுந்து மேலே போவது திருமதி நடனமாடுவது போலிருக்கிறது.

அவள் கண்கள்—அவள் பார்வை—அவள் முகம்—எங்கும் தெரிகிறது. மணிவண்ணன் சுற்றுமுற்றும் பார்த்தபடி இருக்கிறான்.

திராவகம் பொங்கி வழிகிறது. புகை கிளம்புகிறது. குணாளனும் பக்கத்திலிருப்பவர்களும் வந்து தீயை நிறுத்தி புகையை அடக்குகிறார்கள்.]

குணா: பொங்கி வழிவதற்கு முன் தீயை நிறுத்திவிடச் சொன்னேனே! ஏன் செய்யவில்லை?"

[குணாளன் கோபத்துடன் செல்கிறான். மணிவண்ணன் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான்; குணாளனுக்குச் சிரிப்பு வருகிறது. மணிவண்ணனும் சிரிக்கிறான். மற்றொரு சிரிப்பொலியும் சேர்கிறது! எதிரில் திருமதி வந்து நிற்கிறாள்! திருமதி வந்ததும், குறிப்பறிந்து குணாளன், அவ்விடம் விட்டகல்கிறான். அவன் போனதும்]

மணி : திருமதி! செம்பவளத்தை அதரமாக்கி, முத்துக்களை அழகான பற்களாக்கி, பொன்னைப் பொடி செய்து உடலெல்லாம் பூசி, தேயாத் திங்களாக முகத்தைத் தீட்டி, இயற்கை அளித்துள்ள எழிற் செல்வமாம் உன்னை...

திரு : என்னை?