உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

79

மணி: (பெருமூச்சு உகுத்து) இன்னும் இரண்டு திங்கள் பொறுத்திருக்க வேண்டுமாம்! கட்டித் தழுவி, காதல் ரசம் பருகுதற்கு! அப்பா சொல்லி விட்டார்.

[அவள் கரங்களைப் பற்றுகிறான்; கைகளை உதறிவிட்டு...]

திரு: இரண்டு திங்கள் போகவேண்டும் தெரியுமா?

மணி: எதற்கு திருமதி?

திரு: அதை, அப்பா சொல்லவில்லை?

மணி: சொன்னார்! சொன்னார் என் சுந்தராங்கி! கையைப் பிடிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே!

திரு: அவர் சொல்லாததை நான் சொல்கிறேன். கையைப் பிடிக்கக் கூடாது. புடவையைத் தொடுவதுபோல் கிள்ளக்கூடாது; பூச்சூடுவது போல் முத்...(தலையைக் குனிந்து கொண்டு) கொடுக்கக்கூடாது!

மணி: அப்புறம்?

திரு: வந்து...வந்து..

மணி: வரவும் வேண்டாம்; போகவும் வேண்டாம்.

[இழுத்தணைத்துக் கொண்டு]

திருமதி! விதியைப் பற்றிக் கூறுகிறார்கள்! ஊழ் பற்றி உரைக்கிறார்கள். எவர் எப்படிக் கூறிய போதிலும், என் விதி உன்னோடு பிணைக்கப்பட்டு விட்டது. செம்புலப்பெயல் நீர்போல், அன்புடை நெஞ்சங்களாய் இணைக்கப்பட்டு விட்டோம் எழிலரசி! இது விதியா! சூழ்நிலையா என்றெல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. நீ இல்லாமல் இனி என்னால் இருக்கவே முடியாது. தேடக் கிடைக்காத புதையல் நீ! தேவருலகத்து அமிழ்தம் நீ! தின்னத் திகட்டாத தேமாங்கனி நீ. உன் அப்பா ஆராய்ச்சியில் தோல்வியடைந்து விட்டால்கூட மன அமைதி பெற முடியும்! உன்னைப் பெறுவதில் நான் தோல்வி கண்டிருந்தால்...திருமதி! என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை!

திரு: அன்பரே! இடையே அண்ணன் இருக்கிறார்!