இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
இன்ப
மணி: குணாளனுக்கும்கூட என் எண்ணத்தை எடுத்துச் சொல்லிவிட்டேன்! முழு மனத்தோடு ஒப்புக் கொண்டு விட்டான்!
[அவள் முகத்தோடு அவன் முகம் சேர்க்கப் போகிறான். அவள் ஒரு கையால் அதனைத் தடுத்து...]
திரு: இரண்டு மாதம் இருக்கிறது.
மணி: குறும்பு உன் கூடப் பிறந்திருக்கிறது திருமதி!
[அவளை விட்டுவிட்டு தான் நிறுத்திவிட்டு வந்த ஆராய்ச்சி உலை அருகில் செல்கிறான். ஏதோ நினைவு வந்தவனாக துள்ளிக்குதித்து..]
திருமதி! பார்த்தாயா, உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். நண்பர் ஒருவரைச் சந்திப்பதாகக் கூறியிருந்தேன். போய்வரட்டுமா? குணாளன் வந்தால் கூற வேண்டாம்.
திரு: வெள்ளி நிலா, நடு வீதியில் இருக்கிற இந்த நேரத்திலா நண்பரைச் சந்திக்கப் போகிறீர்கள்!
மணி: அவர் மூலம்தான் என் எதிர்காலம் நிர்ணயிக்கப் பட இருக்கிறது. அவசியம் போகவேண்டும்.
திரு: நான் அறிந்து கொள்ளக் கூடாதவரோ அவர்?
மணி: விவரிக்கிறேன் திருமதி, வேளை வரும்போது!
[என்று கூறிவிட்டு வெளியேறுகிறான்.]
திரு: என்ன வேலையோ, என்ன வேளையோ?
[சொல்லிக்கொண்டே படுக்கைக்குச் செல்கிறாள்.]
காட்சி—28
[மாலதியின் வீடு. நள்ளிரவுக்கு மேலாகி இருக்கிறது. மாலதி மனத்திரையில் பல்வேறு காட்சிகள் உருவகமாகின்றன. திருமுடியார் ஒரு புறம் தன் இரு கைகளையும் ஏந்தி தனக்குக்கொடு என்று கேட்பதைப் போல ஒரு காட்சி! ஒரு கையில் தூக்குக்கயிற்றை வைத்துக்கொண்டு, அதிகார முறையில் அச்சுறுத்தி தன்னிடம் கொடுத்துவிடு