இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒளி
81
என்று கார்மேகம் மிரட்டுவதுபோல ஒரு காட்சி! மன்னன் குமாரவேலன் மீதும் பாதுகாவலன் விக்ரமன் மீதும், திருமுடியார், இரணப் பொடிகளைத் தூவி, கொலை செய்துவிட்டு, தானே மன்னன் என்று பிரகடனப் படுத்துவதைப்போல ஒரு காட்சி. மல்ல நாட்டு மன்னன், பைகளைப் பெற்றுக் கொண்டு, கார்மேகத்துக்கு முத்துமாலை பரிசளித்து, கட்டித் தழுவுவதைப்போல் காட்சி ஒன்று. திருநாட்டு மக்கள் எல்லாம் திரண்டுவந்து வாள், வேல் முதலான ஆயுதங்களால் தன்னைத் தாக்குவது போல் காட்சி ஒன்று. இந்தக் காட்சிகளை அவள், உருவகப்படுத்திக் கொண்டதும், உடல் வெடவெடத்து விடுகிறது. அச்சம் கவ்விக்கொள்கிறது. 'வீல்' என்று கத்திகொண்டே கீழே விழுந்து விடுகிறாள். தடுமாறிக் கொண்டே எழுந்து கட்டிலில் வந்து அமர்கிறாள். ஆழ்ந்த சிந்தனையை அது பிரதிபலிக்கிறது. மல்ல நாடு தெரிகிறது; சிறை தெரிகிறது; சிறைக்குள் அவள் பூட்டப்பட்டிருப்பது தெரிகிறது. சிறைக்காவலன் தெரிகிறான். மஞ்சத்தில் வைத்து கொஞ்சிக் கொண்டே அவனைக் கொலை செய்யும் காட்சி தெரிகிறது. திருநாட்டுக்கு வந்து, திண்டாடியது முதல், அரண்மனை உறவைப் பெற்று, நாட்டிய நங்கையாய் ஆனதும், பிரமுகர்கள் பலபேர் காதல் பிச்சைக்குக் காத்துக் கிடந்ததும், கடைசியாக மாதவனிடம் தான் மயங்கிப் போனது வரையில் நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் திருமுடியாரும், கார்மேகமும் எதிரே நிற்பது போல் உருவகப்படுத்துகிறாள். நடன அரங்கில் மயங்கி விழுவதும், தக்க தருணத்தில் திருமதி தானே ஆடி விழாவுக்கு களை சேர்ப்பதும், திருமதியால் அன்று விக்ரமனின் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டதும் நினைவுக்கு வருகின்றன. மீண்டும் ஆழ்ந்த சிந்தனை. ஏதோ ஒரு முடிவை