உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

95

[வாச மலர்களை கை நிரம்ப எடுத்துக் கொண்டு, விநாயகரின் அருகில் சென்று, அங்கம் அங்கமாகத் தொட்டு வணங்கிவிட்டு, இறுதியாகத் துதிக்கையையும் தொட்டு வணங்குகிறார்]

மக்களின் கவனம் விநாயகர்மீது பதிந்திருப்பதைப் போலவே, அறிவானந்தரது கவனமும் திருமுடியாரின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் மீதும் பதிந்திருக்கிறது. விநாயகரிடம் வந்து திருமுடியார் நிற்கும்போது, அறிவானந்தரும், அவருக்கு அருகில் வந்து நின்றுகொண்டு கவனிக்கிறார். நெஞ்சப் பதட்டத்துடன் மறுபடியும் மூன்று முறைகள் துதிக்கையினைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, கண்களை மூடிக் கொள்கிறார்.

கூடியிருந்தவர்களிடையே பரபரப்பு ஆரவாரம் ஏற்படுகிறது. அறிவானந்தர் உட்பட விக்ரமனும், மற்ற அனைவருமே வியப்புக்குள்ளாகின்றனர்.

விநாயகரின் துதிக்கையிலிருந்து தீச் சுவாலைகள் வெளிப்படுகின்றன. சுவாலை கொழுந்துவிட்டெரிகிறது. கூடியிருந்த பக்தர்கள் கூட்டம், கன்னத்தில் மாறிமாறி போட்டுக்கொண்டும், கீழே சாஷ்டாங்கமாக விழுந்தும் பக்தி செலுத்துகின்றது.

ஆரவார ஒலி கேட்டு, திருமுடியார் கண்களைத் திறந்து பார்க்கிறார், துதிக்கையிலிருந்து தீச்சுவாலைகள் தெறித்துக் கொண்டிருக்கின்றன.

மக்கள் வெள்ளத்துக்கிடையே இருந்து, 'திருமுடியார் வாழ்க! தெய்வீகம் வாழ்க!! தேவன் அருள் வாழ்க!!' என்ற வாழ்த்தொலிகள் கிளம்புகின்றன! இருந்த இடத்திலிருந்தே கைகளை உயர்த்தி ஆசி அருள்கிறார் திருமுடியார்.

விக்ரமனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. திருமுடியார் வெற்றி பெற்று விட்டார்; தீர்ந்தது தன்வாழ்வு என்று அஞ்சுகிறான்.

அறிவானந்தர் அருகிலிருந்த மக்களில் சிலரைத் தம் அருகே அழைத்து—