உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இன்ப

அறிவா: மெய்யன்பர்களே! திருமுடியாரிடம் தெய்வீக அருள் நிரம்பி இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்! பாராட்டுகிறேன். யாராலும் விளைவிக்க முடியாத அற்புதத்தை ஆண்டவனின் அருளால் ஆக்கிக் காட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

[மக்கள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள். திருமுடியாரின் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்தப் பேச்சு கேட்டு விக்ரமனின் இதயமும் துடிக்கத் தொடங்குகிறது]

ஒரு : உண்மைதான்! திருமுடியார் தெய்வீக அருள் பெற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார்! கடவுளின் கருணையால்தான் உலகம் வாழமுடியும் என்பதை மெய்ப்பித்துவிட்டார். உலகின் மருள் நீக்கி, அருள் நிலவச் செய்ய அவரால் தான் முடியும் என்பதை தெளிவாக்கிவிட்டார்! பாராட்டாமலிருக்க முடியுமா?

அறி: பாராட்டத்தான் வேண்டும்! போதுமென்கிற அளவுக்கு என் பாராட்டுக்கள். ஆனால் ஒன்று! ஆண்டவனின் அருள் காரணமாகத்தான் இந்த அற்புதம் நிகழ்த்த முடியுமென்றால், இந்த அற்புதத்தை ஒரே ஒரு முறைதான் நிகழ்த்த முடியும் என்று ஏற்றுக்கொள்ள முடியாது!

[என்று கூறிவிட்டு, திருமுடியாரைப் பார்க்கிறார். அவர் இதயம், வெடித்துவிடும் நிலையிலிருக்கிறது. இந்தப் பாவி எதற்காக இங்கு வந்தான்? என்னென்ன விபரீதம் விளையுமோ என்ற அச்சமும் அவரைப் பற்றிக் கொள்கிறது. அறிவானந்தரது இந்தக் கேள்வியால், விக்ரமன் மெல்ல தெளிவடைகிறான். இனி அறிவானந்தர் திருமுடியாரை வெற்றி காண்பார் என்று நம்புகிறான். அப்போது]

திருமுடியார் அவர்களே! ஆண்டவனின் அருள் பலிக்கப்பெற்ற அடியவர் நீங்கள் என்று நானும் இந்த மக்கள் அனைவருமே ஒப்புக் கொள்ளுகிறோம். உயிரின்றி உட-