பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இன்ப மலை வருகிறேன் என்றேனே! உங்களை யார் வரச் சொன்னார்கள்? என்று கேளாமல், அன் போடு மெல்ல மெல்ல மழைத் . துளியால் நனைந்த நீல மணிபோன்ற கரிய நம்முடைய கூந்தலை அவிழ்த்துவிட்டு . முதுகு மறையும் படியாகச் செய்து வாரிப் பிழிந்து, " அடடா !. எத்தனை அன்போடு என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் !" என்று யாரா வது சொல்வார்களா? “ இந்தச் சிடுக்கான வழி உங்களுக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்? என்று கேட்பார்களா? தோழி: நாம் கரடியையும் பாம்பையும் புலியை யும் 'யானையையும் கண்டு அஞ்சாமல் அவற் றைத் தாண்டிக்கொண்டு சென்ற அருமையை நிச்சயம் பாராட்டி நம் இளைப்பை ஆற்றப் புகுவார் நின் காதலர். தலைவி: ஐந்து பகுதியாகப் புனையும் என் மணியை ஒத்த ஐம்பால் (கூந்தலைச் சிறுபுறம் (முதுகு) புதைய வாரிக் கூந்தற் கொத்தைப் பிழிந்து, “நீயிர் இச்சுரம் அறிதலும் அறிதிரே, என்று கூறி அன்போடு உசாவி ஆறுதல் கூறுபவர்களைப் பெறுவதாக இருந்தால், இந்தக் கடிய வழி யைக் கடந்து செல்வது அரிது அன்று; இது. நிச்சயம். ஈயற் புற்றத்தின் ஈரமான பக்கத்தை அடுத்து வந்து குரும்பியாகிய வல்சியை 104