பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* AMSMSMAMMMMAMMBMSMMSMMSMSMMAMAAMSASAASAAASJ ،............۱-۰ - ۰ . م............................. ر.م

மணிமிடற் றந்தனன்

AASAASAASAASAAASMJSAMAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASJAMMAMMSMMSMSMS ...............۔یہ جم ...م. ہم درہم

பின் வரும் அந்தணன் என்பதோடு ஒட்டி நிற்பதால் எயிற்று என்று விகாரமாயிற்று. எயிற்று அந்தணன் என்று கூட்ட வேண்டும்.

விலங்கு வால் வை எயிறு என்பதற்கு மற்றப் பற்களுக்கு மாறுபட்டுத் தோன்றும் கோரப் பற்கள் என்று பொருள் சொன்னல், அது இறைவனுக்குப் பொருங்காது.0 ★ சிவபிரானுடைய சடையைக் காட்டுகிறர் புலவர். அது செக்கச் செவேலென்று இருக் கிறது. நெருப்புக் கொழுந்து விட்டாற்போலப் படர்ந்திருக்கிறது. ஒரே சடையாக இராமல் தனித்தனியே இருக்கிறது. அப்படி இருப் பதைப் புரி சடை என்று சொல்வார்கள். நெருப் புக் கொழுந்து விட்டாற் போன்ற சடை, பள பளவென்று ஒளிவிடும் சடை, புரிசடை என்று புலவர் சடையின் பெருமையைச் சொல்கிருர்,

எரிஅகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை. 0 நெருப்புக் கொழுந்து விட்டாற்போன்ற, விட்டு விளங்கும் தனித் தனியே உள்ள சடையையும்.

அகைந்தன்ன சடை, விளங்கு சடை ,புரிசடை எனத் தனித்தனியே கூட்டவேண்டும். எரி - நெருப்பு. அகைதல் . தழைத்தல். அகைந்தது அன்ன என்பது அகைந்தன்ன என்று செய்யுளுக்காக விகாரப்பட்டது. அவிர்ந்து விளங்கு தல்-மிகுதியாக ஒளிர்தல். புரி சட்ை . ஒன்றுகச் சேராமல் தனித்தனியே புரிபுரியாக உள்ள சடை.

மேனியையும் எயிற்றையும் சடையையும் இன்னும் சிலவற்றையும் உடைய இறைவன் என்று சொல்ல வருகிருர் 0

29