பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S AAASASAS SSAS SSAS SSASMASJJMSMSMMAAASAASAASAASAASAASAASAASAASAAASMSMSMSM SMSMSMS

இன்ப மலே

பலபல பூமரங்களும் அங்கே நிறைய இருக் கின்றன. தேன் நிரம்பிய சிறு கிண்ணங்களைப் போன்ற அந்தப் பூக்களோடு உறவாடித் தாதுரதித் தேனுண்ணும் வண்டினங்களுக்கும் அங்கே குறைவு இல்லை. மலர்தோறும் தேனைத் தொகுத்து மலைச்சாரலில் பெரிய பெரிய தேன் அடைகளே வைத்திருக்கின்றன.மலையிலே அச்ச மின்றி மனம்போன போக்கிலே வண்டுகள் வைக்கும் தேனிருல்கள் மிகப் பெரியனவாக இருக்கின்றன. அவற்றைப் பெ ரு ங் தே ன் என்று புலவர்கள் சொல்வார்கள். அந்தத்தேன் முதிர்ந்து விளைந்து கீழே சொட்டுகின்றது. தேனிருல்களே அடைஅடையாக விழுகின்றன. கீழே பாறையில் குழிவான இடங்களில் சிறிய சிறிய சு:னகள் இருக்கின்றன. அந்தச் சுனே களில் மேலிருந்து ஒழுகிய தேனும் விழுந்த தேனடைகளும் கலந்து நாளடைவில் முதிர்கின் றன; புளிக்கின்றன. உண்டவர்களுக்குக் கள் ளுண்ட மயக்கத்தைத் தரும்படி சுனேநீரோடு கலந்த தேன் இருக்கிறது. அதை நீர்ச்சுனே என்பதைவிடத் தேன்சுனே என்று சொல்வதே பொருத்தம். 象 .

வாழையும் பலாவும் மலிந்த அந்த மலேச்சாரலிலே சந்தனமரங்களும் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. அவற்றின்மேல் மிளகு

45