பக்கம்:இன்ப வாழ்வு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இன்ப வாழ்வு


மக்கள் போகிய அணிலாடு முன்றில் புலம்பில் போலப் புல்லென்று அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே’ என்னும் குறுந்தொகைச் (43) செய்யுளால் இனிது உணரலாம்.

(உழையர் - பக்கத்திலுள்ளவர்; சாறு - திருவிழா; புகல்வேன் - விரும்பி மகிழ்வேன்; மன்ற - உறுதியாக; அத்தம் - பாலை நிலம்; முன்றில் - முற்றம்; புலம்பு இல் - தனித்த வீடு; புல்லென்று - பொலிவழிந்து; அலப்பென் - வருந்துவேன்.)

திணை: பாலை. பாலைக்குரிய பிரிவைப் பற்றிக் கூறியிருத்தலானும் பாலை நிலத்தின் இயல்பு விளக்கப் பட்டிருத்தலானும் இது பாலைத் திணையாயிற்று.

துறை பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. இது பொருள் வெளிப்படை. பாடியவர்: அணிலாடு முன்றிலார். பாலை நிலத்தில் உள்ளதும், மக்கள் இல்லாமையால் தனித்துப் பொலி விழந்ததும் ஆகிய வீட்டின் முற்றத்தை அணிலாடு முன்றில் என்று சிறப்பித்துப் பாடிய காரணத்தால் இப் புலவர் அணிலாடு முன்றிலார்’ என்னும் பெயர் பெற்றார். இங்ஙனம் பாடியதில் என்ன சிறப்பு நயம் உள்ளது என்று நோக்குவோம்:

பெயர்க்காரணச் சிறப்பு:

புலவர் பாழ்மனையின் முற்றத்தில் அணிலாடும் இயற்கைத் தன்மையை உள்ளவாறு எடுத்தியம்பியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/105&oldid=550672" இலிருந்து மீள்விக்கப்பட்டது