பக்கம்:இன்ப வாழ்வு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

109


செவ்வியதாயுள்ளது. அத்தகைய வயலுக்குரியான் ஒருவன், ஒரே ஏர் உடையவன். அவன் தன் ஒரே ஏரைக்கொண்டு வயல் முழுவதையும் மிகமிக விரைந்து உழுவான் அல்லவா? அவனுக்கிருக்கும் விரைவு எவ்வளவோ, அவ்வளவு விரைவினை உடையதாய் இருக்கின்றது என் நெஞ்சு. எனவே, கார்காலத்தின் வரவினையும் தலைவி யிருக்கும் ஊரின் தொலைவினையும் வழியின் கொடுமை யினையும் நெஞ்சின் விரைவினையும் ஒத்திட்டுப் பார்க்குங்கால் ஒன்றுக்கொன்று முரணாய்த் தோன்றுகின்றது. இந்நிலையை எண்ணி யெண்ணி யான் மிக வருந்து கின்றேன்” என்று நைந்து தன் ஆவலை அடக்க முடியாதவனாய் விரைந்து புறப்படலானான். இந் நிகழ்ச்சியை,

‘ஆடமை புரையும் வனப்பின் பணைத்தோன்

பேரமர்க் கண்ணி இருந்த ஊரே நெடுஞ்சேண் ஆரிடை யதுவே கெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓர் ஏர் உழவன் போலப் பெருவிதுப்பு உற்றன்றால் கோகோ யானே.” என்னும் குறுந்தொகைச் (131) செய்யுள் இனிது புலனாக்குகின்றது.

குறிப்புரை

பேரமர்த் தண்ணி = தலைவி; நெடுஞ்சேண் = நெடுந்

தொலைவு; ஆரிடையது = அடைதற்கரிய இடத்தில்

உள்ளது; செவ்வி - பதம்; விதுப்பு = விரைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/110&oldid=550679" இலிருந்து மீள்விக்கப்பட்டது