பக்கம்:இன்ப வாழ்வு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

129


இக்குழந்தையே இல்லாவிட்டால், எங்கள் குடும்பமே நொடித்துப் போய்விடும். குழந்தைப் பருவத்திலேயே இத்தகு பேருதவியைச் செய்தான் என்றால், பெரியவனான பின்னர் இன்னும் மிகப் பெரிய உதவிகளையெல்லாம் செய்வான் அல்லவா? நாங்கள் இறந்த பின்னும் அவனால் எங்கள் பேரும் புகழும் விளங்கும் அல்லவா? பிள்ளை யுள்ளவர்களின் பெருமையே பெருமை!” என்று கூறித் தன் பூரிப்பைத் தெரிவித்தாள். அம்மடந்தையின் மட்டற்ற மகிழ்ச்சிதான் என்னே! பிள்ளை தந்த பெருவாழ்வு அல்லவா?

இதுபோன்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நாமும் உலக வழக்கில் கண்கூடாகக் காணலாம். இந்நிகழ்ச்சி முழுவதையும், பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகிய அகநானூறு என்னும் நூலில் உள்ள செய்யுள் ஒன்றில் அழகாக அமைத்துப் பாடியுள்ளார் செல்லூர்க் கோசிகன் கண்ணனார்’ என்னும் புலவர் பெருமான்.

அச்செய்யுள் வருமாறு:

‘இம்மை யுலகத் திசையொடும் விளங்கி

மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செறுகரும் விழையுஞ் செயிர் தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி கிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின் இயன்ற அணியன் இத்தெரு இறப்போன் மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/130&oldid=550701" இலிருந்து மீள்விக்கப்பட்டது