பக்கம்:இன்ப வாழ்வு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

151


தெரிகிறது தெரிகிறது. இந்தக் குறட்கருத்தை மறுப்பவரைப் பற்றிப் புரிகிறது புரிகிறது! ‘காமத்தைப் பற்றியாவது மனைவி வாயிலாக அறிந்திருப்பார்; கள்ளைப் பற்றி வள்ளுவர்க்கு என்ன தெரியும்? அதனை அவர் அருந்தி யறிந்திருக்கமாட்டார்; அதனால் தான் இப்படி எழுதிவிட்டார்” என்று, கள் கிடைக்காத காலத்திலே ட கிடைக்காத இடத்திலே, கள்ளைக் கண்டல்ல - கள்ளை எண்ணியெண்ணிச் சொக்குபவர் கூறும் மதிப்புரை காற்றில் மிதந்து வருகிறது. இஃது என்ன சிக்கலாயிருக் கின்றதே!

மெய், வாய், கண் முக்கு, செவி என்னும் ஐம்பொறி களின் வாயிலாக மக்கள் உலகத்தோடு - உலகப் பொருள்களோடு தொடர்பு கொள்கின்றனர். நாம் உலகப் பொருள்களுள் சிலவற்றை மெய்யின் (தோலின்) முலம் தொட்டுச் சுவைக்கிறோம்; சிலவற்றை வாயின் (நாக்கின்) மூலம் உண்டு சுவைக்கிறோம்; சிலவற்றைக் கண்ணின் மூலம் கண்டு சுவைக்கிறோம்; சிலவற்றை முக்கின்மூலம் மோந்து சுவைக்கின்றோம்; சிலவற்றைச் செவியின் மூலம் கேட்டுச் சுவைக்கிறோம். இவற்றுள் எது மிக எளிது? எது மிக அரிது? இந்த வினாவுக்கு விடை கண்டு விட்டால், இந்தக் குறட் கருத்தின் சிக்கலை அவிழ்த்து விட்டவர்களாவோம். அது மட்டுமன்று; வேறு எத்தனையோ வகை இன்பப் பொருள்கள் இருக்க, இந்தக் குறளில் உணவுப் பொருளான கள்ளை எடுத்துக் கொண்டதின் காரணமும் விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/152&oldid=550725" இலிருந்து மீள்விக்கப்பட்டது