பக்கம்:இன்ப வாழ்வு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத் தமிழ்

முற்காலத் தமிழிலக்கியங்கள்முதல் பிற்காலத் தமிழிலக்கியங்கள்வரை பெரும்பாலான தமிழ் நூற்கள், எந்தக் கோணத்திலாவது, அகப்பொருள் இன்பக் கருத்து அமைந்தனவாக - சிற்றின்பச் சுவை செறிந்தனவாக இருப்பதாக முன் கட்டுரையில் பேசினோம். அது குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கும் வந்தோம். அவ்வளவு ஏன்? பொதுவாக, தமிழ்மொழியை - தமிழ் நூற்களைக் கற்பதும் கேட்பதும் ஆராய்வதும் சிறந்த இன்பம் பயக்கும். அத்தமிழின்பம், சிற்றின்பத்திற்கோ அல்லது மற்ற இன்பங் கட்கோ எவ்வகையிலும் குறைந்ததாகாது. தமிழ்மொழியே ஒரு சிறந்த இன்பப் பொருளாகும் இதனைத் தமிழர் பலர் உணர்ந்தாரிலர். எனவே, அவர்கட்கு இன்பத் தமிழின் இனிய சுவையைப் பரிந்துரைக்கச் சில இலக்கியங்கள் முயன்றுள்ளன. அப்பணி புரியும் செய்யுட்கள் சிலவற்றை ஈண்டு விளக்குவோம்:

பெறுதற்கரிய காதலி ஒருத்தியைப் பெற்ற பெறுதற் கரிய காதலன் ஒருவன், தான் அவளிடம் நுகர்ந்த இன்பத்தின் சுவையைப் புனைந்துரைக்கவில்லை; உண்மை யாகவே உரைக்கின்றான். அவன் அவள் கனிவாயை நுகாந்தானாம், அந்நுகர்ச்சியின் பயனை எவ்வாறு வெளியிடுவது? அவனுக்குப் பட்டதைச் சொல்லி விடுகிறான். இல்லை, அவன் சொல்ல வேண்டும் என்று எண்ணிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/29&oldid=550758" இலிருந்து மீள்விக்கப்பட்டது