பக்கம்:இன்ப வாழ்வு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக்களின் மனைவாழ்க்கை

உயர்ந்த உயிர்ப் பொருளாகிய மக்களினத்தைப் போலவே பறவை விலங்குகளுக்குள்ளும் உயர்ந்தவை உள்ளன என்று, முன் கட்டுரையாகிய பறவைகளின் இன்ப இல்லறம் என்னும் கட்டுரையில் ஆராய்ந்து துணிந் தோம். இக்கருத்துக்குத் தொல்காப்பியம் எழுதிய தொல் காப்பியரும் நமக்குத் துணை புரிந்தார். நன்னூல் எழுதிய பவணந்தியாருங்கூட மறைமுகமாக நமக்கு ஆதரவு தந்துளார். அத்தகு பறவை விலங்குகட்குள் மூன்று வகைப் பறவைகளின் காதல் வாழ்வினை முன் கட்டுரையில் கண்டோம். அந்த அடிப்படை நினைவோடு இக்கட்டுரையில் மூன்று மாக்களின் (விலங்குகளின்) இன்பக் காதல் மனை வாழ்க்கையைக் காண்போம். (மா விலங்கு) அம்மாக்களின் வரிசையில் முதலில் மானை எடுத்துக்கொள்வோம்:

மான்

விலங்குகட்குள் மான் மிக இனியது - அழகியது - மென்மை இயல்பினது துள்ளியோடுந் தன்மையது. இத்தகு மானை, பெண்களுக்கு-அவர் தம் கண்களுக்குஅவரது துள்ளலுக்கு ஒப்புமை கூறத் தமிழ்ப் புலவர்கள் தவறுவதே இலலை. காடுகளில் இம் மானினம் கூடி வாழ்வதே ஒரு தனி அழகாகும். குறிப்பிட்ட பிணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/65&oldid=550798" இலிருந்து மீள்விக்கப்பட்டது