பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இவருக்கு இயற்கையாகக் கைவரப் பெற்ற வரப்பிரசாத மாகும். எழுத்தில மட்டுமல்லாது பேச்சாற்றலிலும் இவர் மிகப் புகழ் பெற்று விளங்கியவர். இவரது கன்னட, ஆங்கிலப பேசசுக்களைச் செவிமடுததோர் இவரது நாவன்மையைப் பாராட்டாதிருக்க முடியாது. இவரது குரல் ஒலிக்காத இலக்கிய மேடைகள் கனனட இலக்கிய உலகில் இலலை எனலாம். 1960ஆம ஆண்டில் உடுப்பியில் நடைபெற்ற கன்னட இலக்கிய மாநாட்டில் இவர் ஆற்றிய தலைமையுரை முற்போக்கு இலக்கிய உலகில் எனறும் ஒலிக்கத்தக்க பெருஞ் சிறப்புக்குரிய தொன்றா கும். பகலெலலாம படிப்பு, இரவெல்லாம் எழுத்து எனும் போக்குடைய இவரது இடையறா எழுத்துப் பணியால் கன்னட இலக்கிய உலகு பெற்ற பெரும் பயன் கொஞ் நஞ்சமனறு.