பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இலக்கியச் சிறப்பைப் புலப்படுத்துவதில் தீவிரமாக ஈடு பட்டார். இவரது பாரதீயக் கலைப் புலமையையும் இலக்கியப் பேரறிவையும் பாராட்டி குடியாட்சித் தலைவர் பரிசளித் துப் பாராட்டினார் ஆந்திர மாநில அரசும் அவரைத் தமது ஆஸ்தானக் கவிஞராக நியமித்துப் பெருமை பெற் திது இவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை வடமொழி இலக்கியச் சிறப்பைப் பிறரறியச் செய்வதிலேயே செல விட்டார் அதன பொருட்டு எளிதாக வடமொழி பயிலத் துணையாயமைய வல்ல பாட நூல்கள பலவற்றையும் எழுதித் தத்துள்ளார் கிரியா தர்சம் வால்மீகி ஜீவ சரித் திரம்' சமஸ்கிருத சம்வாதம்' போன்ற நூல்கள் புதிதாக வடமொழி பயில்வோருக்குப் பெரிதும பயனபடத்தக்க துணை நூல்களாகும் இவ்வகையில் இவர் தயாரித்து வெளியிட்ட மற்றொரு பெரு தூல் ஆந்திர-சமஸ்கிருத' அகராதியாகும் கிருஷ்ணாச்சாரியருடைய பதரிநாத சுப்ரபாதம்' என்ற வட மொழி நூல் பக்தர்கள் பெரிதும் போற்றி நாடோறும் இறை வணக்கத்திற்குப் பயன்படுத்தும் நூலாகும். ஆந்திராவில் மட்டுமல்லாது கர்நாடகம் தமிழ்நாடு உட்பட தென்னகமெங்கும் பயணம் செய்து தமக்குள்ள கலையறிவை இலக்கியப் புலமையை அவதானத் திறமை யை கவிச்சிறப்பைம் புலப்படுத்தியுள்ள இவர் ஆந்திர அவ தான வரலாற்றில் மட்டுமல்லாது இந்தியக் கலைகளின் நிறையறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்து இலக்கிய வரலாற் றில் சிறப்புமிகு இடததைப் பெற்றுளளார் எனில் அது மிகையன்று.