பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பாள ரங்கநாயகம்ம 1920ஆம்ஆண்டுமுதல் துரிதமாக வளர்ச்சிபெறத் தொடங் கிய நவீன தெலுங்கு இலக்கிய வளர்ச்சிப் பாதையில் அதிக அளவில ஆண் எழுத்தாளர்களே பெரும் பங்குபெற்று வந்தார்கள். இந்நிலையே, தமிழ், மலையாள, கன்னட மொழி இலக்கியப் பகுதிகளிலும் நீடித்தது எனலாம். அங் கொருவர் இங்கொருவராகப் பெண்கள் இலக்கியப் பணி யாற்றியபோதிலும் அஃது மக்களின கவனத்தைப் பெரும் அளவில் கவருவதாக இருந்ததில்லை. ஆயினும் தெலுங்கு இலக்கியத் துறையைப் பொறுத் தவரை 1920ஆம் ஆண்டிற்குப் பிறகு தெலுங்கு இலக்கிய வுலகில் அசுர வேகத்தில் தலை தூக்கியவர்கள் பெண் எழுத்தாளர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களது இலக்கிய ஆதிக்கம் இன்றுவரை சரியாமல் நிலை குத்தி நிற்பது வியப்புகுரிய ஒன்று. அதற்கான பெரும்பங்கு முப்பாள ரங்கநாயகியம்ம, த்விவேதுல விசாலாட்சி. ஜானகி ராணி, லதா, வாசிரெட்டி சீதா தேவி, பரிமளா சோமேஸ்வர், யத்தன பூடி சுலோசனா ராணி பூரீதேவி, துரகா ஜானகி ராணி, சாரதா போன்ற வர்களையே சாரும். ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயரை புனை பெயராகக் கொண்டு எழுத்துப் படைப்புக்களை வெளி யிடுவதுதான் எங்கும் காணும் முறையாக உள்ளது. ஆனால், தெலுங்கு இலக்கிய உலகில் இதற்கு மாறான போக்கு ஏற்பட்டிருப்பது விந்தையானதாகும். அங்கே பல பெண் எழுத்தாளர்கள் ஆண்களுக்குரிய பெயர்களை புனை பெயராக வைத்துக் கொண்டு இலக்கியம் படைத்து வருகிறார்கள்.