பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 தாரியாகி திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரி மலை யாள மொழிப் பேராசிரியராக நீண்டகாலம பணி யாற்றியதோடு, 1957-59ஆம் ஆண்டுகளில் அரசோச்சிய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையிலும்,கல்வியமைச்சராக அமர்ந்து அரும் பணியாற்றியுள்ளார். முற்போக்கு எழுந் தாளர் குழுவின் தலைவரான அவர் சாகித்திய அக்கா தெமியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார். பேராசிரியர் முண்டசேரியின் இலக்கிய வாழ்வு மலர்ப் படுக்கையாக அமைந்ததன்று. கலலையும் முல்லை யும் கடந்து வநத போராட்ட வாழ்வாகும். அவருக்குக் கிடைத்த பாராட்டுக்களைவிட சந்தித்த எதிர்ப்புக்களே ஏராளம் காய்தல் உவத்தல் இனறி நடுநிலைமையில் தன உள்ளத்திற்குச் சரியெனததோனறிய கருத்துக்களைத் துணிவாக வெளியிடும் இவரது போக்கே இதற்குக் காரணமாகு ம். பழமை என்பதற்காகவே எதையும் குறைவாக மதிப் பிடுவதோ அல்லது புதுமை என்பதற்காகவே எதையும் ஆகா! ஊஹா! எனக் கண்மூடித்தனமாக வானளாவப் போற்றிப் புகழ்வதோ இவரிடம் காணமுடியாத ஒன்று. எதிலும் குறைநிறை கணடு துணிவாக அதனை மக்கள் மன்றததில்-அறிஞர் முன்வைக்கும் இயல்பு கொணடவர். இத்தகைய போக்கும் போராட்ட வாழ்வும் இவர் கல்லூரிப் போரசிரியராகப் பொறுப்பேற்ற நாளி லிருந்தே தொடங்கிவிட்டதெனலாம். இக்கால கட்டத்தில் இவர் ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் நிறை புலமை பெற்றார். இதன் மூலம் பழமை புதுமை இரண்டின் அடித்தளத்தையும் துல்லியமாக மதிப்பிட்டறியும ஆற்றல் ஏற்பட ஏதுவாயிற்று சமய, சமூக எல்லை கடந்த நிலையில் தம் சிந்தனையையும் கருத்துக்களையும் துணிவுடன் முன