பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். டி. வாசுதேவன் நாயர் நாட்டு விடுதலைக்கு முனனர் இநதிய இலக்கிய உல கின் பார்வை வங்க நாட்டின் இலக்கிய உலகை நோக்கிக் குவிந்திருந்தது போனறு இறுை மலையாள இலக்கிய உலகின் மீது குவிந்திருக்கிறது என்றால் இது மிகையான கணிப்பு அனறு விடுதலை வேட்கை உணர்வை ஊட்டும் இலக்கியப் படைப்புகள அனறு வங்கப புரட்சி எழுத் தாளர்களால உருவாக்கப்பட்டது போன்று இன்று மறு மலர்ச்சி இலக்கியப் படைப்புக்கள எதார்ததலாத அடிப் படையில் உருவாகும் இலக்கியங்களுககு வளமிக்க விளை நிலமாக இன்று கேரளம் விளங்குகிறது இதற்குக் காரணம் என்ன? எத்தனையோ விஷயங்களை இதற்குக் காரணமாகக் காட்டலாம் என்றாலும எழுச்சிமிகு உணர்ச்சி கொண்ட இளைய தலைமுறையின் வீறு கொணட எழுததுக்கள் இலக்கிய வடிவம் பெற ஆககமூட்டும சூழ்நிலை அங்கு உருவாகி இருப்பதே இதற்கு ஏற்ற காரணமெனலாம் இத்தகைய வீறார்ந்த இளம் தலைமுறைக்கு முன்னு தாரணமாக விளங்குபவர்தான் திரு எம்.டி வாசுதேவன் நாயர் அவா கள். திரு வாசுதேவன் நாயர் அவர்கள் நாற்பது வயதைக் கடக்கு முன்னரே சிறந்த சிறுகதைப் படைப்பாளர் புதின ஆசிரியர் இதழாசிரியர் திரைப்படக் கதாசிரியர் திறமை மிகு திறனாய்வாளர் எனற சிறப்புக்களை பெற்றதோடு இத்துறைகளில் தனக்கென தனி வழி வகுத்து தனி முத திரை பெற்றவராகவும் திகழ்கிறார். 1979ஆம் ஆண்டில இவரது புதினப் படைப்பான "காலம்' எனற நூலுககுப் பரிசளிதது சாகித்திய அக்காதெமிப் பெருமை பெற்றது.