பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 இவரது இலக்கியப் பணிக்கு நிலைக்களனாக அமைந் திருப்பது இவரது பத்திரிகைத துறை பணியாகும். 1956 ஆம் ஆண்டில் புகழ் பெற்ற மலையாள வார இதழான 'மாத்ருபூமி'யின் உதவியாசிரியராகப் புகுந்த இவர் தன் திறமையின காரணமாக குறுகிய கால எல்லைக்குள்ளா கவே அதன் ஆசிரியராக பொறுப்பேற்றார் இன்று மாதரு பூமி' இதழ் வடிவிலும் உள்ளடக்கததிலும் வலுவும் பொலிவும கொண்டு கேரள தாட்டின மிகச் சிறந்த வார இதழ் என்ற போற்றுதலைப் பெற்று விளங்குவதற்குக காரணம் இவரது முறபோக்கு உணர்வும் எழுததுத் திறமையும் இலக்கிய ஆற்றலுமே யாகும். நாற்பத்தைந்து வயதை எட்டுவதற்கு முன்னரே தலைசிறந்த பத்திரிகை யாளர் எனற பெருமையையும் இவர் பத்திரிகை யுலகில் பெற்றுவிட்டார். இவர் படைப்பிலக்கியத் துறை போன்றே திறனாய் வுத் துறையிலும் ஆர்வமுள்ளவராக விளங்குகிறார். இவர் திறனாயவு சம்பந்தப்பட்ட நூலொன்றும் எழுதி யுள்ளார். இவரது படைப்புத திறன்பற்றி இவரே ஒரு சிறு நூல் எழுதியுள்ளார். பயண நூல் ஒன்றும் எழுதி யுள்ளார். இலக்கியத்தைப் பற்றி இவர் தனக்கென சில நல்ல கொள்கைகளை வகுத்துககொணடு எழுதி வருகிறார். இலக்கியத்தில் புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்காது இலக்கியத்தின் உள்ளுறைக்கே முக்கியத்துவம் தரவேணடும் என்பதில் அழுத்தமான நம்பிக்கையுள்ளவர் இவரது படைப்புக்கள் சமூக மறு மலர்ச்சிக்கு உறுதுணை யாக, படிப்போரிடையே ஒருவித விழிப்புணர்ச்சியை ஊட்டுவனவாக அமைந்துள்ளன என்பதுமறுக்க முடியாத உண்மையாகும், 16