பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23? ஐரோப்பிய இலக்கியங்கள், எழுத்தாளர் பலரிடையே புதியதோர் உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தி பாது போன்றே மாராரின் உள்ளக் கிளர்ச்சிக்குத் தூண்டு கோலாயமைந்தன ஃபிரெஞ்சுப் புரட்சி எழுததாளர் ஹ்யூகோவின படைப்புக்கள் நாலாப்பாட் நாராயண மேனன் மொழி பெயர்தத ஹ்யூகோவின் அமரப் படைப் பான லே மிஸ்ரபிள்' (ஏழை படும்பாடு) மாராரின உள்ளத்தில் அழுத்தமான உணர்வுகளை விதைத்தது சமஸ்கிருத இலக்கியப் பயிற்சி தந்த ஆழ்ந்த கலையுணர்ச் சியும் ஹ்யூகோவின் படைப்புக்களளித்த மனிதாபிமான பேருணர்ச்சியும் இணையவே இவரது சிந்தனையும் எழுததும் புதிய கோணத்தில் வளரத் தொடங்கின மனிதா பிமான உணர்ச்சியை மையமாகக் கொண்டு பழைய இலக்கியங்கள் பலவற்றை விளக்கும் அரிய முயற்சியில ஈடுபட்டு திறனாய்வுப் புததிலக்கியத் துறையை வளப் படுததினார். இம்முறையில் இவர் மேற்கொண்ட இலக்கிய ஆராய்ச்சிகள் மலையாள இலக்கியத் திறனாய்வுத்துறை வலுவோடும் பொலிவோடும் வளர பெரிதும் உதவின என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவரது திறனாயும் ஆற்றலுக்கும் ஆராய்ச்சிப் புலமைக்கும் கட்டியங்கூறும் அரிய படைப்பாக அமைந் துள்ளது "பாரத பரியாதனம் (மகாபாரதத்தில்பயணம்) எனும் ஆராய்ச்சி நூல் மகாபாரதத்தை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் பாரதத்தின் முக்கியப் பாத்திரங்களை ஆழமாக அலசி ஆராயும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றைக் கொண்ட நூலாகும் இவரது ஆராய்ச்சிப் புலமையைப் போறறும் வகையில் அன்றைய சென்னை மாநில அரசு இந்நூலுக்குப் பரிசளித்துப் பாராட்டியது.