பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வளமான வளர்ச்சிப் பாதையை உடையதாக விளங்கி வருகிறது. கன்னட இலக்கியத் துறையில் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் சக்தியாக தொடக்க முதலே விளங்கி வருபவர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் அவர்களாவர். "மாஸ்தி கன்னட இலக்கியததின ஆஸ்தி' என்று கன்னட மக்கள் பெருமையாகப் பேசும் அளவுக்கு அளவற்ற தொண்டை ஆற்றியிருப்பவர் மாஸ்தியாவார். கவிஞர். புதினப் படைப்பாளர் திறனாய்வாளர் சிறு கதையாசிரியர் எனப் பலவேறு இலக்கியப் பணிகளை மாஸ்தி ஆற்றியிருந்த போதிலும் சிறந்த சிறுகதைப் படைப்பாளர் எனற அளவிலேயே அவர் இன்று போற் றப்படுகிறார். சாதாரண குடும்பப் பிரச்கினைகளை அடித்தளமாகக் கொணடு எளிய நடையில் கதையைச் சொல்லிச் செலவதில தனணிகரற்ற திறமையாளராகத் திகழ்கிறார். இவரது சிறுகதைகளில் வரும் கதாநாயகர்கள் சாதாரண வாழ்வில் அன்றாடம் சந்திக்கக் கூடியவர் களாக இருந்த போதிலும் அவர்களை லட்சிய உணர்வு படைத்தவர்களாக இவரது சிறுகதைகளில் இவர் நட மாடவிடுகிறார் இவரது கதை சொல்லும் பாணி படிப்போர் உள்ளத் தைக் கதையோடு ஒன்றச் செய்யும் பாங்குடையதாகும் கற்பனை வளமிக்க இவரது கதைகள் வாழ்வியல் நெறி களையும், கன்னடப் பண்பாட்டையும் அழகுறச் சித்தரிக் கும் போக்கில் அமைந்துள்ளன இவர் எழுதிய சுப்பண்ணா என்ற சிறுகதை அளவில் சற்று பெரிதாக அமைந்திருந்த போதிலும் இசைவாணர்