பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பாவித்து அன்பு காட்டும் பண்பினை ஒருத்தி என்றைக்குப் பெறுகிறாளோ அன்றுதான் அவள் தாய்மையின் நிறைகுடமாக முடியும் என்றும் அவளே அனைத்துலகத் தாய்மையுடையவளாவாள் என்றும் அழகுபடக் கூறித் தெளிவுபடுத்துகிறார். இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பான "சோபானம் (படிகள்) குறிப்பிடத்தக்க ஒன்றாகும் இஃது ஆசிரியையின் வாழ்க்கைச் சாயலையும் அனுபவ முத்திரை களையும் பளிச்சென விளக்குவதாகும். இதில் அடங்கி யுள்ள 'நாலு கெட்டில் (வீட்டில) வழி வாக்கில் (நாற் சந்தியில்) வெளிச்சத்திலேக்கு (வெளிச்சத்தை நோக்கி) என்ற முப்பகுதிகளிலும் பாலாமணியம்மாவின் உள்ளத் தின் வளர்ச்சியை படிப்படியாக விளக்குவனவாகும் இவரது குருவும் மாமாவுமாகிய நாலாபாட் நாராயண மேனனின இறப்பைக் குறித்து இரங்கற்பா வாகப் பாடிய லோகாந்தரங்களில் (பல்வேறு உலகங் களில்) எனும் நூல் உடலைவிட்டுப் பிரிந்த ஆத்மா கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அறிந்தவாறே பல்வேறு நிலைகளைக் கடந்து வானத்தின் வழியே மோட்சத்தையடைவதைச் சித்தரிப்பதாகும் இதன் வாயி லாகப் பிறப்பு வாழ்க்கை வீடுபேறு ஆகிய அம்சங்களை கற்பனை வளத்தோடு படிப்போரின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் தெளிவுபடக் கூறுகிறார். அவரது கவிதைப் படைப்புக்களில் குறிப்பிடத்தக்க வேறு சில படைப்புகள் ஸ்திரீ ஹ்ருதயம் (பெண் இத யம்) பாவனையில் (கற்பனையில்) களிகொட்ட" (விளையாட்டுக் கூடை) 'ப்ரணாமம் முதலியவைகளாகும் இவரது தலைசிறந்த கவிதைப் படைப்புகளுள ஒன் றாகக் கருதப்படும் 'முத்தசி (பாட்டி) சாகித்திய அக்கா தெமி (1966) பரிசு பெற்ற நூலாகும். இப்பரிசினைப்