பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 பெற்ற முதல் மலையாளப் பெண்மணி என்ற வகையிலும் இவருக்குப் பெருஞ் சிறப்புண்டு. இத்தொகுப்பில் உள்ள கவிதைகளுள் ஒன்றான முத்தசி' எனும் கவிதையையே நூலின் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தாய்மைப் பண்பையே கருவாகக் கொணடு தொகுக்கப்பட்ட இஃது தாய்மைப் பண்புக்கு இலக்கணம வகுக்கும் அரிய படைப் பாகும். தத்துவ உள்ளடக்கமும் கருத்தாழமும் நடை நயமும் பொருட் சிறப்பும் கவிதைப் போக்கும் உணர்ச்சிச் செறி வும் கற்பனைக் கவர்ச்சியும் கொண்ட முத்தசி இக்கால மலையாள இலக்கிய உலகிற்குக் கிடைத்த மதிப்புமிக்க மணியாரமாகும், தன் மாமா நாலாபாட் நாராயண மேனனின் உற வால் இலக்கியம், தத்துவம், சமுதாய சீர்திருத்தம் ஆகிய வற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் நாராயண மேனனின் நல்ல நண்பரான வள்ளத்தோலின இலக்கியத் தொடர்பால் கவிதை உள்ளமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட பாலாமணியம்மா கருத்தாழமிக்க உணர்ச்சி கொப்பளிக் கும் கவிதைகள் இயற்றி மலையாளக் கவிதை உலகை வள மூட்டியவர் என்பது வரலாற்று உண்மையாகும்.