பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 தன் கல்விச் செலவைக் கவனித்துக் கொண்டார். கல்லூரி யில் காலடி வைத்தபோதும் இதே நிலைமை நீடித்தது தான் படித்த இண்டர்மீடியட் வகுப்புப் பாடங்களுக்கு "நோட்ஸ் அச்சடித்து விற்று அதனைக் கொண்டு தன் கல்லூரிக் செலவைச் சரிக்கட்டினார். வறுமையின கொடிய தாக்குதல் அவரைக கல்லூரிக் கல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கச் செய்தது. கல்லூரிப் படிப்புக்குப் புள்ளி வைத்தாலும் அவரது உள்ளத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த படிபபார்வத் துக்கு-இலக்கியப் புலமை வேட்கைக்கு அவரால தடை போட முடியவிலலை. அடுத்த ஆண்டே மலையாளமொழி விததுவான் தேர்வுககு 'பிரைவேட் மாணவனாகத் தேர்வு எழுதி மாநிலத்திலே முதலாவதாகத தேர்வு பெற்றார். பள்ளிகளில் மொழிப்பண்டிதராகப் பணியாற்றிக் கொண்டே பி.ஓ.எல (ஹானர்ஸ்) எம் ஏ; பட்டங்களைப் பெற்றார் இவரது இலக்கியப் பெரும புலமையை மதித்த சென்னைப் பல்கலைக் கழகம் 1944ஆம் ஆண்டில் "டாக்டர்’ பட்டம் பெறுவதற்குரிய ஆராய்ச்சி மாணவ னாக ஏற்றுக் கொண்டது. இச்சமயத்தில் இந்தக் கல்லூரி மாநிலக் க ல் லூ ரி யு ம் அடுத்தடுத்து இவரை LyyüᎫ fᎢ☾ விரிவுரையாளராக ஏற்றுக் கொண் டன. 1947ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகம் இவருககுத் துணைப் பேராசிரியர் பதவி தந்து ஏற்றுக்கொண்டது. பின்னர் 1951இல ஆராய்ச்சிப் புலமைக்காக டாக்டர்' பட்டமளித துப் கெளரவித்த தோடு பல்கலைக் கழக மலையாள மொழித் துறைத் தலை வராகவும் டாக்டர் தாயார் அவர்களை ஏற்றுப் பெரு மைப்படுத்தியது. உண்மையான இலக்கிய ஆர்வமும் கடுமையான உழைப்பும் இருந்தால் கல்வித் துறையில் எததகைய ஏற்றமும் பெற முடியும் என்பதற்கு டாக்டர் நாயரின் வாழ்க்கை நல்லதோர் எடுததுக்காட்டாக உள்ளது.