பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 உள்ளடக்கத்தாலும் கருத்துச் செறிவாலும் புகழ் பெற்ற வர்கள். இவர்கள சமூக வாழ்வியலைப் பல்வேறு கோணங் களில் படம் பிடித்துக் காட்டுவதில் ஆற்றல் மிக்கோராக விளங்கியவர்களாவர். விடுதலைக்குப் பின்னர் நாவல்கள் ஒரு புதிய பாட்டை யில் நடைபோட்டு செழிப்போடு வளராயின. இக்கால கட்டததில் சமுதாயத்திலும் மனித உள்ளங்களிலும் வேக மாக திகழ்ந்த மாற்றங்களை நிலைக்களனாக அமைத்து நிறைய புதினங்கள் வெளிவரலாயின. இப்படைப்பாசிரி யர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கொடவன்டி குடும்ப ராவ், மஹlதர ராம மோகன் ராவ்,உப்பல லட்சுமண ராவ் சத்திய நாராயண மூர்த்தி போன்றோர் ஆவார். கிராமிய சூழ்நிலையை களமாகக் கொண்டு. அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் போக்கை விண்டுரைக்கும் திறமை மிக்கோராக விளங்குபவர் மதுராந்தகம் ராஜா ராம் ஆவார். சமூகப் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் சிந்திப்பதில் ஆந்திர மக்களிடையே செல்வாக்குப் பெற்ற வர்கள் சுதர்சனம், ரந்தி சோமராஜு, சிங்கராஜ லிங்க மூர்த்தி, தும்மலபல்லி ராமலிங்கேஸ்வர ராவ் முதலியோர் களாவர். தெலுங்குப் புதின இலக்கியத் துறையைப் பொறுத்த மட்டில் விடுதலைக்கு முன் ஒரிரண்டு பெண் எழுத்தாளர் கள் அங்குமிங்குமாக தலை தூக்கினாலும் நாட்டு விடு தலைக்குப் பின் அவர்கள் எண்ணிக்கை விரைந்து வளர்ந்தது எனலாம். 1050-க்குப் பின்னர் தெலுங்கு நாவல் துறையில் பெண்களின் ஆதிக்கம் ஏற்படத் தொடங்கிவிட்டதென்று கூட கூறலாம். 3