பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 : கினிர்கள்), "முடியனாய புத்ரன் (நாசகாலி மகன்) போன்ற அரசியல், சமூக நாடகங்கள் படைக்கப்பட்டுள் ளன. மலையாள நாடகத துறையில் காணும் மற்றொரு சிறப்பம்சம் நடிப்பதறகென எழுதப்படும நாடகங்கள படிக்கத் தகுந்தவைகளாகவும் அமைந்திருபபதாகும். இதே போக்கில் இசை நாடகங்களும் சமீப காலமாக மலையாள நாடக உலகில் செல்வாக்குப் பெற்று வளர்ந்து வருகினறன சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எழுந்துளள இசை நாடகங்களில் தோப்பில் பாலியின் நாடகங்களும செறுகாட் எழுதியுள்ள "நம்மளொந்து' (நாமொன்று) என்ற நாடகமும் கே.டி முஹம்மதின 'இது பூமியானு' (இது பூமியாக்கும்) போறைவைகள் குறிப்பிடத்தக்கவை பாகும். இன்று மேடையைவிட மலையாள நாடக இலக்கியத் துறைக்கு உரமாக ஆக்கமூட்டி வருபவை ஒரங்க, வானொலி நாடகங்களாகும். ஒரங்க நாடகங்களுள் ஆர்.எஸ். குறுப்பின் 'ஆருடெ ஜெயம்' (யார் வெற்றி), காரூரின் "அப்பூப்பன்' (பாட்டன்) மற்றும் கேசவ தேவ், டி.என். கோபிநாதன் நாயர் ஆகியோரின் படைப்புக்கள் சிறந்தவைகளாக விளங்குகின்றன. சுதந்திரம் பெற்ற பினனர் கடந்த இருபதாண்டு களுக்கு மேலாக மலையாள இலக்கிய உலகம் புதுப்பாதை வகுத்து வளரத் தொடங்கியவுடன் அதன் வளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்டும் வகையில் மலையாள இலக்கியத் திற னாய்வுத் துறையும் புதிய நோக்கில் படைப்பிலக்கியங் களின் ஆக்கத்திற்குதவும் தக்க உரைகல்லாக மாறி வரு கிறது. ஜோஸப் முண்டசேரி இத்துறையில் குறிப்பிடத் தக்க திறனாய்வாளர் ஆவர். முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும் முறையில் இவர் செய்த திற னாய்வுகளைக் கொண்ட "மாற்றொலி (எதிரொலி),