பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நடமாடவிடும் போக்கு இவரிடம் எப்போதுமே காணப் படாத ஒரு அம்சமாகும். சமுதாய கோணல்நிலைகளை நாசுக்காகத் தாக்குவதில் இவர் கைதேர்ந்தவர். ஹள்ளிய ஹத்து சமஸ்தரு (கிராமத்தில் பத்துப் பெரிய மனிதர்கள்) “கர்பகுடி' (மூலஸ்தானம்) முதலியன இதற்குத தக்க சானறாக அமையும் அங்கதப் படைப்புகளாகும். புதினங்களையன்னியில் சிறுகதைகளையும் "கீசா கெளதமி' போன்ற இசை நாடகங்களையும் ஆவி நிண்ட பாராமக்கெ (அபூவிலிருந்து பாராம வரை) 'ஆபூர்வபஸ்கிம் (கிழக்கல்லாத மேறகு) முதலிய பயன நூலகளையும் எழுதியுள்ளார். அவரது பரந்த அனுபவங் களை அடித்தளமாகக் கொண்ட பித்து மனதின பதது முகங்கள்’ என்ற அவரது சுய வாழ்க்கை வரலாற்று நூல் அவரை நன்கு அறிந்துணர விரும்புவோர்க்கு உதவும் உரை கல்லாக விளங்குகிறது. நாடகம், நட னம், ஒவியம், திரைப்படம் முதலிய கலைத் துறைகள் பலவற்றிலும் ஈடுபட்டு சோதனைகள் பல செய்துபார்த்த காரந்த் சிறுவர் இலக்கியத் துறைக்கு ஆற்றியுள்ள தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. தலைசிறந்த புதின ஆசிரியர் என்பது போன்றே புகழ் பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளராகவும் இவர் விளங்குகிறார். பல அறிஞர்கள் இணைந்து செயல்படும் அமைப்புகளால் கூட சாதிக்க முடியாத பல சாதனை களை வியப்பூட்டும் வகையில் நிகழ்த்தி வெற்றி கண்டிருக் கிறார். 'பால பிரபஞ்ச (குழநதைகளுக்கான கலைக் களஞ்சியம்-மூன்று தொகுதிகள்) "கன்னட-கன்னட அகராதி ' விஞ்ஞான பிரபஞ்ச (பொது மக்களுக்கான விஞ்ஞானக் கலைக்களஞ்சியம்-ஐந்து தொகுதிகள்) அவரது ஆற்றலையும் அயராத உழைப்பையும் உலகுக் குணர்த்தும் அசுர சாதனைகளாகும்.